Thursday 30 May 2013


வலியின் ரகசியம் :

என்னைப் போலவே
என் மகளும்

எனக்கு எப்படியோ
அப்படியே அவளுக்கும் வலி துவங்குகிறது
என்றாலும்
அவளுக்கு இந்த வலி
ஒரு ரகசியம் என்று தெரியாது

அவளிடம் நானும் கூட சொல்லிக்கொள்வதில்லை
என் தாய்
என்னிடம் பகிர்ந்து கொள்ளாத
ரகசியத்தின் வலியை

தாங்கவே இயலவில்லை
என் மகள் அயர்ந்து உறங்குவதைக் காண்கையில்

அவள் வயதில்
நானும் இவ்விதம்
தளர்ந்து உறங்கிய நாட்களில்
என் தாயும் கசிந்திருக்கலாம்
அவளின் தாயைப் போலவே

நானும் இந்த வயதில்
அவ்வளவையும் தாங்கிக் கொள்கிறேன்
இந்த ஜீவனத்தின் பொருட்டு

என் மகள் உறங்குகிறாள்
என்னைபோலவே
வலியின் ரகசியங்களோடு

அதனை அறியாதபடி .


 

No comments: