Thursday 30 May 2013

உறைதல். . .

விரைந்து செல்கையில்
முகத்தில் படும் குளிர்க்காற்றென
உன்னை உணர்கிறேன்

நீ
பனிப்பிரதேசம்
அப்பொழுது நான் கோடைநிலமாக இருந்தேன்

என்னைக் காண மேகமாய் மாறுகின்றாய்
பின்
ஆலங்கட்டி மழையாய் பொழிகின்றாய்

உன் அன்பு பெருகியோடிய நிலத்தில்
காய்கனிகள்
அடிப்பட்டு உதிர்கின்றன

நான்
உள் வாங்கி மலர்கின்றேன்
பட்ட விதையிலிருந்த பூக்களாய்

இன்னும் ஒரு பனிக்காற்றாய்
அது
உன்னைப் போலவே
உன்னை நோக்கி வருகின்றது

தேங்கிக்கிடக்கும் நீர்நிலைகளில்
என் முகம் பார்க்கின்றேன்
நீ
தெரிகின்றாய்

பனிக்காற்று வீசி நம்மைக் கலைக்கின்றது

உறைந்த ஏரியைப் பார்த்துக் கொண்டிருக்கிறது உலகம் .

No comments: