Monday 5 May 2014

இரவு - பிப்ரவரி 27




அது ஒரு நிலம்
அங்கே மேட்டுநிலத்தின் முடிவில்
பாதை முடிந்து விடுவதுபோலத் தோன்றும்
இரவுகளுக்கு
அடையாளம் உள்ளது
அது ஒரு இரவு
ஆழ உணர்ந்த இரவு
ஒருமுறை
தன் நீளவிரல்களினால் நீவினான் அவன்
அவள் நீலப் பெருங்கடல் ஆனாள் 
இன்னுமொருமுறை
அவ்விரல்களின் மந்திரத்தில்
வானம் தனதெனக் கொண்டாடும் பறவையானாள்
எப்போதும் அவன் தொடுதலில்
வானில் மீனாக
தண்ணீரில் பறவையாக
மயங்கிப் பிறப்பெடுக்கிறாள் .
%

Courtesy : Painting-Carla Volpi

No comments: