Sunday 4 May 2014

இரவு -பிப்ரவரி 10





இரவு வானின் நட்சத்திரங்களை
பகலிலும் உடலில்  சூடிக்கொண்டாள்
புதிய மொக்குகள் துளிர்க்க  
ஒளிரும் வாசனையாக
காற்றின் துகள்களுக்குள் சேகரமானாள்
பெறுதலும் தருதலும் ஒருசேர நிகழ்த்தும் அவள்
ஒன்றைப் பெறுவதற்காக
ஒன்றைத் தருவதற்காக
மேலும் ஒன்றுமற்றுப் போவதற்காக
காற்றின் சுழற்சியில்
தன்னை ஒப்புகொடுத்தாள்.
%

No comments: