Monday 5 May 2014

காலை - பிப்ரவரி 21





பறப்பதை வழக்கமாக்கிக் கொள் மகளே
நீ ஒரு சிட்டுக் குருவி
தோள்பட்டையின் இறக்கைகளை
பறத்தலுக்கு வாகாக
இப்போதுதான்
அசைக்கத் துவங்கியிருக்கிறாய்

அடுக்கடுக்காக கேள்விகள் குமிழியிடும் மனம்
உனக்கென்று நானறிவேன்
இந்தப் பருவம் அப்படி
உணர்ந்து இருக்கிறேன்

பதில்களும் அறிவேன்
நான் கடந்து வந்த வலிகளின் 
துவக்கப் புள்ளி இதுவெனத் தெரியுமென்பதால்
சுள்ளியும்  நாரும் சருகுகளும் கொண்ட உன் கூட்டினை
நீ அமைக்கும் வரை
இந்த நாட்களின் அதிகாலையில்
முத்தமிட்டுச் சொல்கிறேன்
உடலின் வலியைப் பழகு .
%

No comments: