Monday 5 May 2014

இரவு - பிப்ரவரி 24





ஏற்கனவே நிரப்பியாயிற்று
எல்லாவற்றிற்கும் மேலாக நிறைந்தும் ஆயிற்று
என்றபோதும்
செயலில் ஆனந்திப்பதை விடவும்
உரையாடலில்
தன்னிறைவு அடைகிற இரவும்
தேடுதலின் போதாமையில்
மௌனமாகும் இரவும் ஒன்றேயல்ல
புரிதலுக்கு அப்பாற்பட்டதாக அமைந்து விடுகிற இரவு
மனிதனைவிட ஆயிரம் மடங்கு அடர்வாக இருக்கிறது .
%

No comments: