Monday 9 July 2012

காதலின் நீட்சி…



நெடுநாட்களாக  அவனைத்
எனக்கு தெரியும்
நெடுங்காலமாக அவனைத்தான்
தேடிக் கொண்டிருந்தேன்
என்பதை அறியாமலிருந்தேன்

பின்பொரு நாளில் நிகழ்ந்த சந்திப்பில்
அறிந்த போது
அவனிடம் சொல்வதற்கென
அவகாசம் இருந்த போதிலும்
அவனது வார்த்தைகளுக்கு
பதிலாக
என்னிடம்
சொற்களோ
சொற்றொடர்களோ இல்லை

பள்ளிகூடத்தில்
பாடநேரத்தில் விளையாட அனுமதிக்கப்பட்ட
சிறுமியின் குதூகலத்துடன்
தரப்படுகிற
கொஞ்சம் முத்தங்களும்
கூடுதல் மௌனமும்
அவனுக்கானவையென்பதை
அவன் அறிந்தேயிருக்கிறான்
மேலும்
முன்கடந்த காலத்தையும்
எதிர் நீளும் காதலையும். .


1 comment:

Ponnambalam kalidoss ashok said...

'தேடல் ' என்ற இனிய சுவைக்காக வாழ்நாள் முழுவதும் இந்த அன்பு பந்தம்...
சில நேரங்களில் சொற்கள் சொல்லும்போது சுகம்..
சில நேரம் சொல்லாமலே .....
சொல்லபோகும் தருணம் ...'தம் தன தம் தன தாளம் வரும்..'
அந்த மகிழோசை எப்போது ?
'சிறுமியின் முத்தங்களும் கூடுதல் மௌனமும்'' ஒரு சேரும் காலம், கோலமாக மனதில் ...
..மெல்ல மெல்ல வாசகனின் மனதை ஆட்கொண்டு..
காதலும் எதிர்காலமும் சேரும் களம் ---கார்கால மேகம் மயில் அகவும் காலம் ..
படத்தில் குடை கொண்டு ,அந்த பெண் பனி விழும் மலர்களை தடுப்பது , தன் மனம் கவர்ந்தவன் தூவும் பூக்களை விரும்புவதாலா ...
காதலின் நீட்சி…சொல்லத்தான் நினைக்கிறேன் தொடர்ச்சியாக ...