Wednesday 25 July 2012

திசை மானி …




எத்தனை  வகையில் தான்
வெளிப்படுத்துவாய்
உனதன்பை

என் கவிதைகளில்
ஒளிரும்
உன் வார்த்தைகள்
என்னை ஒளியூட்டிக்  கொண்டிருக்கின்றன

அது
உனது
அன்பைப்  போலவே
இருக்கின்றது

எனக்குள்
இருக்கும் உன்னை
இந்த  கவிதைகளைத்  தவிர
யார் அறிவார்

எத்தனை திசைகள்
இருப்பினும்
இந்த காந்தம்
உன்னை நோக்கியே

இருப்பது
இழுக்கென  நினைத்தாலும்

உனது
புன்னகை  போதும்
நான்
மலரவும்

உன்னை
மகிழ்விக்கவும் .


1 comment:

Ponnambalam kalidoss ashok said...

வாழ்வின் திசைமானி, நம்மை மணி ஓசையென மனதிற்குள் ரீங்காரிமிடும் அடர் காட்டு கரு வண்டின் இனிய ,இனம் புரியா ஓசை என..
இதயத்தால் இணைந்த இருவரின் ஒத்த அலைவரிசையாக ..இங்கீதமுள்ள சங்கீதமாக காது மடல் வழியே இதயதிற்குள் ..
காந்த அன்பு இணைக்கும் பொழுது , இயற்பியல் விதி , இரு முனையும் பிறழ்ந்து செல்லும்..
ஆனால், இங்கு , இயற்பியல் விதி உடைக்கப்பட்டு..அருகே அருகே ஒன்றி சென்று..
திசைமானி,--இனிய வாழ்வின் இதய வழிகாட்டி..