Sunday, 4 May 2014

இரவு -பிப்ரவரி 3




காதலைத் தரித்துக்கொண்ட உயிர்
வேண்டுவது ஒன்றுமில்லை
நகரத்திற்கு செல்கிற
அகலப் பாதையில் பயணிக்கிற முழு இரவொன்றில்
அவன் தோள் சாய்ந்திருக்க வேண்டுவது மட்டுமே .
அப்போது கூர்த்த செவிகளுக்குள் கிசுகிசுப்பது
காற்றின் பாடல் மட்டுமல்ல.
மிகச்சிறிய உயிரொலியின் மீட்டல் அது
என்பதை உணர்ந்த கணத்தில்  
நிலத்திலிருந்து ஆகாயத்திற்கு
அந்தப் பாதையை நீட்டுகிற 
மிகச்சிறிய விருப்பம் மட்டுமே .
%
courtesy : painting -Pablo Picasso

No comments: