Sunday, 4 May 2014

இரவு -பிப்ரவரி 13



ஆண்டாண்டு காலமாக பெண் காத்திருக்கிறாள்
அவளுக்கு பாகுபாடு ஒன்றும் இல்லை .
சிலசமயம் காதலன்
சிலசமயம் கணவன்
சிலசமயம் மகன்
இன்னும்
சிலசமயம் நண்பன்
ஆமென்றோ இல்லையென்றோ
அவன் சொல்வதேயில்லை
என்றபோதும்
மௌனங்களால் நிரப்பிய கணங்களோடு
உறவுகளுக்காக
அவள் காத்திருக்கிறாள்
அவளுக்குத் தெரியும்
ஒருபோதும் பொழுதுகள் தனக்கானவை அல்லவென
குறிப்பாக இரவுகள் .

Courtesy : Painting - kate-bedell

No comments: