பூட்டிய கதவிடுக்குகளின் வழியே
ஊர்ந்து வரிசையமைக்கும் சிற்றெறும்புகளைப் போல
சதாப்பொழுதும் உள்ளூறும் அன்பினாலேயே
அலைக்கழிக்கப் படுகிறோம்
மேலும்
நிலைப்பெறுகிறோம்
என்பதெல்லாம்
ஏதோ ஒரு உயிரின்
மனக்கரங்களைப் பற்றிக் கொள்வதற்காவே .
இந்த உலகம் யாருக்கும் பூட்டப் பட்டிருக்கவில்லை
திறந்தே இருக்கிற
கதவுகளுக்கும் சன்னல்களுக்கும்
நம் மனதிலிருக்கும் பூட்டினை அகற்றி
இந்த தினத்திலும் நேசிப்பைக் கொண்டாடுவோம் .
Courtesy : Painting - Osnat Tzadok
No comments:
Post a Comment