சதாப் பொழுதும்
ஊறின தென்னஞ்சோகை வாசம்நிறைந்த பெண்ணொருத்தி
ஊறின தென்னஞ்சோகை வாசம்நிறைந்த பெண்ணொருத்தி
பழங்கஞ்சியை
தூக்குச்சட்டியில் ஊற்றி
ஈராங்காயை கசக்கி ஊதி எடுத்துக்கொண்டு
வீட்டைவிட்டு வெளியேறினாள்
தூக்குச்சட்டியில் ஊற்றி
ஈராங்காயை கசக்கி ஊதி எடுத்துக்கொண்டு
வீட்டைவிட்டு வெளியேறினாள்
கிழக்கு இன்னும் சிவந்திருக்கவில்லை
"கருக்கல்லயே
கிளம்பினால்தான்
முந்தின நாள்
ஊறல் போட்ட தென்னமட்டை முழுவதையும்
முந்தின நாள்
ஊறல் போட்ட தென்னமட்டை முழுவதையும்
பின்னலிட்டு
கிடுகு ஆக்க
முடியும்" என்பதைக் கணக்கிடுகிற அவள்
தெருவில்
இறங்கியவுடன்
குளிர் காற்று காதுகளுக்குள் ஊசியேற்றியது
குளிர் காற்று காதுகளுக்குள் ஊசியேற்றியது
"இதையெல்லாம் பார்த்தா ஆகுமா"
வர
முத்தாலம்மனுக்கு
புள்ளைகளுக்கு
புதுத்துணி எடுக்கணும்
என நினைக்கையில்
என நினைக்கையில்
அவளின்
காலைப்பொழுது
வேகமாக
செயல்படத் தொடங்கியது.
%
%
Painting : courtesy -Jayaraj Swaminathan
No comments:
Post a Comment