Monday, 5 May 2014

காலை - பிப்ரவரி 24





அவள்  உடல் திறக்கும்
ஒற்றைச்சொல் அறிந்தவன்
மௌனமாக இருக்கிறான்
அவள் உறங்குகிறாள்
தினந்தோறும் 
நள்ளிரவுக்குச் சற்று பின்னால்
வந்து விடுகிறான்
தனித்துறங்கும் அவளைக் கண்களினால் தீண்டுகிறான் 
ஒற்றை விரலில் காதோரக்கூந்தல் விலக்குகிறான்
அவன்  அசைவில்
அதிகாலையில் மலர்ந்தது  பூ .
%

No comments: