Sunday, 4 May 2014

இரவு -பிப்ரவரி 14





திணறடிக்கும் தனிமைப் பொழுதுகளில்
பித்தேறிப் பிதற்றி
மீண்டும் மீண்டும் அழைப்பு விடுக்கும் குரலை
சுவைத்துப் பார்க்கும் வாசனை பரவுகையில் 
நீர்மையின் நிலம் விரிகிறது

நீங்கா நறுமணப் பொழுதுகளினால்
நோயுற்று வீழ்கிறான் அவன்

தனக்குள் ஒளிந்துகொள்ளாத அவளுக்கு
பூப்பதும்
பூ முடிப்பதும்   ஒரு  கொண்டாட்டம்
மேலும் கலைவதும்

ஒரு இரவை உருவாக்க
கூந்தலை அவிழ்க்கும் ரகசியம் அறிந்த
கரங்களினாலேயே கூடும்
என்பதை அறிவார்கள் அவர்கள் .
%
 Courtesy : Painting - Rudrakumar Jha

No comments: