முந்தைய
நாட்களின்
முனை சுருளாத பக்கங்களை வாசிக்கத் துவங்குகிறாள்.
முனை சுருளாத பக்கங்களை வாசிக்கத் துவங்குகிறாள்.
இருத்தலுக்கும்
இன்மைக்கும் இடையே
பறவைக் கனவு கண்ட தினங்களில் எழுதப்பட்டவை.
பழுப்பேறிய காகிதங்களாக
மனதின் அடுக்குகளுக்குள்
பத்திரப்படுத்தபட்டிருப்பவை .
பறவைக் கனவு கண்ட தினங்களில் எழுதப்பட்டவை.
பழுப்பேறிய காகிதங்களாக
மனதின் அடுக்குகளுக்குள்
பத்திரப்படுத்தபட்டிருப்பவை .
இரகசியச்
சொற்களும் குறியீடுகளும் அற்ற
நேரடிச்
சொல்லாடலில் குருதி கொப்பளிக்கும்
வாழ்வைப்
பொதிந்திருப்பவை .
அந்தச்
சொற்களின் வெம்மையில்
கசியும் துளி நீரினை
இரவுக்குப் பரிசாக்குகிறாள் .
%
Courtesy Painting -Albertus Joseph
No comments:
Post a Comment