இரவு வானின்
நட்சத்திரங்களை
பகலிலும் உடலில் சூடிக்கொண்டாள்
புதிய மொக்குகள்
துளிர்க்க
ஒளிரும்
வாசனையாக
காற்றின்
துகள்களுக்குள் சேகரமானாள்
பெறுதலும்
தருதலும் ஒருசேர நிகழ்த்தும் அவள்
ஒன்றைப்
பெறுவதற்காக
ஒன்றைத்
தருவதற்காக
மேலும்
ஒன்றுமற்றுப் போவதற்காக
காற்றின்
சுழற்சியில்
தன்னை
ஒப்புகொடுத்தாள்.
%
No comments:
Post a Comment