Sunday, 4 May 2014

இரவு -பிப்ரவரி 15


 



கனவின்  கதவுகளைத் திறந்து 
எத்தனையோ பேர் முன் சென்றுள்ளனர்
ஒருவரும் பகர்ந்தாரில்லை
இது இவ்விதம் என

பெருந்தீக்குள் வீசியெறியப்பட்ட துயரம்
குத்துவாள் வீச்சிற்கும் காற்றின் ஓசைக்கும்
இடையே பதறி எழத் தூண்டுபவை
கடலின் ஆழத்திற்கும்
வானின் மிதத்தலுக்கும் கிறங்கிக் கிடப்பவை
அரூப வடிவங்களில் திடுக்கிடச் செய்பவை
பறவையின் சிறகுகளை அணிந்தவை
நீலப் பூவாகச் சுடர்பவை

கனவுகள்
சிலவேளைகளில் அழகானவை
சிலவேளைகளில் அச்சம் தருபவை
சிலவேளைகளில் ஈரமாகப் பெருகச் செய்பவை

இன்றிரவின்
அவன் கனவுக்குள் நீலமாகத் துளிர்க்க நினைக்கிறாள்
ஒரு முறை மட்டும் அல்ல
%
Courtesy : Painting -jorge monreal

No comments: