ஏற்கனவே
நிரப்பியாயிற்று
எல்லாவற்றிற்கும்
மேலாக நிறைந்தும் ஆயிற்று
என்றபோதும்
செயலில்
ஆனந்திப்பதை விடவும்
உரையாடலில்
தன்னிறைவு
அடைகிற இரவும்
தேடுதலின்
போதாமையில்
மௌனமாகும்
இரவும் ஒன்றேயல்ல
புரிதலுக்கு
அப்பாற்பட்டதாக அமைந்து விடுகிற இரவு
மனிதனைவிட
ஆயிரம் மடங்கு அடர்வாக இருக்கிறது .
%
No comments:
Post a Comment