Sunday, 4 May 2014

முத்தங்கள் மிதக்கும் நுண் கணங்கள்:





முத்தமிட்டேன்

கணக்கிடாத முத்தங்களில்
கணக்கிடாத நுண்கண நேர தாமதத்தில்
உனை வந்து சேரா ஒருமுத்தம்
தனித்திங்கே விழுந்து
துளிர்த்தது என் மீது

ஒன்று நூறாய்ப் பலுகி
நூறு பலவாய்ப் பாய்ந்து பெருகி
எனைச் சுற்றி மிதந்தது

நான் அமிழ்ந்தேன்
பின் மிதந்தேன்

உறங்கா
மயங்கா மிதவை நிலை
மாலை வரை

இன்னும் இங்கே பெருகியபடி இருக்கிறது
உனக்குரிய முத்தமும்
நான் மிதக்கும் நுண்கணங்களும்.
*
 * Paintings : Courtesy -Suchi Krishnan

No comments: