பள்ளத்தாக்குகளில்
இறங்கி
மலைகளில்
மிதந்து செல்கிற முகில்களை
ஏந்தியிருக்கும் அவள் மனதில்
அவனால் கூடியவை எவையென அறிந்திருந்தாள்
கூந்தலை முடிந்துவிடவும்
பூக்களைச் சூட்டிவிடவும்
தவிர
ஏந்தியிருக்கும் அவள் மனதில்
அவனால் கூடியவை எவையென அறிந்திருந்தாள்
கூந்தலை முடிந்துவிடவும்
பூக்களைச் சூட்டிவிடவும்
தவிர
அவளை
உடுத்திக்கொள்ளவும் அறிந்தவன்
அவன்
அவன்
குளிர்ப் பச்சை சுனைநீரை
அவளுள் பெருக்கெடுக்கச் செய்கிற
மந்திரக்கோலை
ஒற்றைச்சொல்லாய் வைத்திருந்தான்
பறத்தல் அவள் இயல்பு என்று
இளவேனிற் பருவத்தை உணர்த்தும்
இரவினைப்
பரிசளித்தான் .
%Paintings : Courtesy -jorge monreal
No comments:
Post a Comment