இரவுகள்
ஒருபோதும் வரையறைக்கு உட்படுவதில்லை
கடலைப்போல
முன்சென்று
சிற்றோடைகளை ஏந்திக்கொள்கிறது
முகப்பில்
அலைகளால் ஆர்ப்பரிக்கிறதாகவும்
ஆழ்கடல்
ரகசியங்களைக் கொண்டதாகவும்
இருக்கின்றன
மனதின் கட்டுக்குள் இருப்பதில்லை
என்றபோதிலும்
சுருதி தாழ்ந்த அதன் வாயிலில்
கனவுகளினால்
ஆன்மாவைத் திறந்து
விடுகிறது .
No comments:
Post a Comment