Sunday, 4 May 2014

இரவு -பிப்ரவரி 4





உண்மையில்
இந்த இரவு நீளமானது
மேலும் துயரமானதும்
நோய்மையின் பிடியில் இருக்கிற ஒருவரே
இதனை அறிய முடியும்
ஓரிடத்திலும் நிலைத்திடாத மனமும்
சிறுநீர் கழிக்க எழுகிற இடையூறும் உறக்கம் கலைக்க
தனிமையும் வலியும் இரத்தச்சிவப்பு நிறமாக உடலினுள் பரவ
மேலும் களைப்படையச் செய்யும் இரவென்றாலும்
நினைவுக்கும் மயக்கத்திற்குமிடையே
ஊடாடி உடனிருக்கும்
நேசக்கரத்தைப் பற்றிக்கொண்டால் 
நோய்மை இரவைக் கடந்துவிடலாம் .
%
 courtesy : painting -Pablo Picasso

No comments: