Sunday, 4 May 2014

காலை - பிப்ரவரி 15





மலைத்தொடரையும்
அதன் அடிவாரத்தை வரைந்தாள்
ஒளி சுடர்கிற அடர் பச்சைத் தாவரங்களையும்
குளங்களையும்
இதழ் விரிந்த பூக்களையும் 
மகரந்த மஞ்சள் வண்ணத்தினையும்
தீட்டத் தீட்ட தேன் சுரக்கத் துவங்கியது
ஆயிரமாயிரம் இதயங்களை  
துளிப்  பூஞ்சாற்றினால் நிரப்ப  நினைத்தாள்
அதிகாலையில் படபடத்துத் திரிகிற 
வண்ணத்துப்பூச்சி பரவசம் மிகுந்து அதன்மீது கிறுகிறுத்தது  
ஆயுளை நீட்டவோ குறைக்கவோ
தன்னால் ஆகாது என்றறிந்த அது
துளியிலும் துளி மதுவால் தன்னை நிரப்பியது 
எதிர்பாராத தாக்குதல் பற்றிய முன் மனக்குலைவுகள் அற்றது
ஒரு வண்ணத்துப் பூச்சி மரணத்தின் புதிர்களை பற்றி அறியாது
ததும்பத் ததும்பச் சாறு வழியும் பூக்களைச் முகரும்
வண்ணத்துப் பூச்சியாக மனம் நிறைந்த கணத்தில்
இவள் தினம் துவங்கியது .
%
 Courtesy : Painting -Lykke Steenbach Josephsen

No comments: