Thursday 9 August 2012

௬டு விட்டு கூடு



நிறைவேறாத  கனவுகளோடு
நான்
மரணத்தைத்  தழுவ  விரும்புவது  குறித்து
துக்கமில்லை

ஆசைகள்
லட்சியங்கள்
கனவுகள்
உன் முன்  அணிவகுக்கின்றன
மரணத்  தருவாயில்

மனதெல்லாம்  நிரம்பித்  தளும்பும்
கனவில்
மரணத்தின்  மொழியை
புரிந்து கொள்ளவே  தீரா  விருப்பம்
அலெக்ஸாண்டர் முதல்
ஆண்டியப்பன்  வரை
கனவுகளால்  நிரம்பிய    மரணங்கள்

ஒவ்வொரு மரணமும்
விதைத்துப்  போகின்றது
இன்னும் இன்னும்
கனவுகளை.

1 comment:

இராதே பக்கங்கள் said...

சிறப்பாக உள்ளது !