தூளியில்
இருந்து கால்கள் வெளியே நீட்டிச்சிணுங்கிய
குழந்தையின் பாதத்தில் முத்தமிட்டு
தோள் சேர அணைத்துத் தூக்கினாள்
குழந்தையின் பாதத்தில் முத்தமிட்டு
தோள் சேர அணைத்துத் தூக்கினாள்
ஈரமான அதன்
உடைகளை மாற்றினாள்
ரவிக்கையைத்
தளர்த்தி
இடது முலை
ஊட்டத் துவங்கினாள்
கண்களை
மூடிக்கொண்டாள்
தோட்டத்தில்
அவள் நடுகிற இளம் தளிர்களுக்கு
நீர் வார்க்கிற கனவினைக் குழந்தைக்குக் கடத்துகையில்
அவளின் அதிகாலை துவங்கியது .நீர் வார்க்கிற கனவினைக் குழந்தைக்குக் கடத்துகையில்
Courtesy :Painting -Katie m. Berggren

No comments:
Post a Comment