அவளுக்கு
எல்லாமே பூக்களின்
வண்ணங்கள்தான்
ஒருமுறை பால்யத்தின் பூக்களாக
உண்ணிப்பூக்களைத் தேர்ந்திருந்தாள்
மஞ்சளும் ஆரஞ்சும் இளஞ்சிவப்பும்
அவளை அலங்கரித்திருந்தன
வளர் இளம்பருவமாக
கனகாம்பரமும் மருக்கொழுந்தும் மல்லிகையும்
என மூன்று வண்ணங்களையே சூடியிருந்தாள்
பின்னாட்களில்
அவன் எழுதும் ஓவியம் மல்லிகை மட்டுமே
இப்போதெல்லாம்
வீட்டுத் தோட்டத்து தக்காளிப் பூக்களையும்
கத்தரிப் பூக்களையும் பிடித்திருக்கிறது
கூடவே
இவளுக்குப் பின்பு அங்கு குடிவருகிற
பெண்ணுக்கும் பூக்களின் வண்ணங்கள்
பிடித்திருக்க வேண்டுமே எனும்
நினைவின் வெண்மையுடன் அவளின் தினம் புலர்கிறது .
வண்ணங்கள்தான்
ஒருமுறை பால்யத்தின் பூக்களாக
உண்ணிப்பூக்களைத் தேர்ந்திருந்தாள்
மஞ்சளும் ஆரஞ்சும் இளஞ்சிவப்பும்
அவளை அலங்கரித்திருந்தன
வளர் இளம்பருவமாக
கனகாம்பரமும் மருக்கொழுந்தும் மல்லிகையும்
என மூன்று வண்ணங்களையே சூடியிருந்தாள்
பின்னாட்களில்
அவன் எழுதும் ஓவியம் மல்லிகை மட்டுமே
இப்போதெல்லாம்
வீட்டுத் தோட்டத்து தக்காளிப் பூக்களையும்
கத்தரிப் பூக்களையும் பிடித்திருக்கிறது
கூடவே
இவளுக்குப் பின்பு அங்கு குடிவருகிற
பெண்ணுக்கும் பூக்களின் வண்ணங்கள்
பிடித்திருக்க வேண்டுமே எனும்
நினைவின் வெண்மையுடன் அவளின் தினம் புலர்கிறது .
%
Courtesy : Painting - Emile Bellet

No comments:
Post a Comment