மூதாதையர்களின்
இழைகளினால் நெய்யப்பட்ட
உடலையே தாங்கி நிற்கிறோம்
ஊடும் பாவுமாக அசைந்தசைந்து
இறுகிக் கெட்டிப்பட்டுக்கொண்டேயிருக்கிறது
அவ்விழைகளில் சாயங்களை
இரவுக்கு ஒன்றென்றும்
பகலுக்குப் பலவென்றும்
அழுந்தப் பூசுகிறோம்
காண்போரிடமிருந்து பெறப்படுகிற நிறம்
இன்றைய தினத்தில்
இளவேனிற் காலத்து
இழைகளினால் நெய்யப்பட்ட
உடலையே தாங்கி நிற்கிறோம்
ஊடும் பாவுமாக அசைந்தசைந்து
இறுகிக் கெட்டிப்பட்டுக்கொண்டேயிருக்கிறது
அவ்விழைகளில் சாயங்களை
இரவுக்கு ஒன்றென்றும்
பகலுக்குப் பலவென்றும்
அழுந்தப் பூசுகிறோம்
காண்போரிடமிருந்து பெறப்படுகிற நிறம்
இன்றைய தினத்தில்
இளவேனிற் காலத்து
அதிகாலைத் தூறல் தந்திருக்கிறது .
%
Courtesy : Painting-Toni Carmine Salerno

No comments:
Post a Comment