வலிகளை விட்டுச்
செல்கிறது காதல்
கணப்பொழுதும்
விலகாத நேசத்தை எதிர்கொள்ளவே
தன்னைத் தயாரித்திருந்தாள்
கணப்பொழுதும்
விலகாத நேசத்தை எதிர்கொள்ளவே
தன்னைத் தயாரித்திருந்தாள்
தொலைதூரத்தில் இருக்கிறான் அவன்
காற்று
மயங்கிச் சாயும்
இவ்வேளையில்
இரவின் பாடலைப்
பாடுகிறாள்
அவனுடன் கூடல்களின் சாத்தியங்களில்
தன்னை இருத்திக்கொள்ளுமவள்
தங்களின் ஒப்புக்கொடுத்தலில்
பொலிவுற்ற கணங்களை
எக்கணமும் எதிரொலி செய்கிறாள்
தனிமையில் உணர்வது காதல்
அவனுடன் கூடல்களின் சாத்தியங்களில்
தன்னை இருத்திக்கொள்ளுமவள்
தங்களின் ஒப்புக்கொடுத்தலில்
பொலிவுற்ற கணங்களை
எக்கணமும் எதிரொலி செய்கிறாள்
தனிமையில் உணர்வது காதல்
%
Courtesy : Painting- Ram Omkar

No comments:
Post a Comment