வானத்தின்
தொலைவும்
வானத்தின்
நீலமும் கண்டு அதிசயிக்கும்
தன்னுடைய சின்னஞ்சிறிய மகளின்
உறங்கும் முகத்தைக் காண்கிறாள்
தன்னுடைய சின்னஞ்சிறிய மகளின்
உறங்கும் முகத்தைக் காண்கிறாள்
பரந்து
கிடக்கும் சிறுமியின்
தலைமுடியை மெல்லக் கோதி விடுகிறாள்
தலைமுடியை மெல்லக் கோதி விடுகிறாள்
தன்னுடைய
பால்யத்தின்
ரகசிய ஊற்றுப் பெருக்கெடுத்த கணங்களை
ஒவ்வொன்றாய் நினைவு
கூர்கிறாள்
வலைக்கண்ணிகளில்
சிக்காத
தன்னுடைய பறவை தினங்களை
பட்டாம்பூச்சிச்சிறகு
விரித்திருக்கும்
தன் பெண்ணுக்குப்
பரிசளிக்க முடிவு செய்த கணத்தில்
தன் பெண்ணுக்குப்
பரிசளிக்க முடிவு செய்த கணத்தில்
அவளின் அதிகாலை
துவங்கியது .
%
%
courtesy : Painting - Rohan Sandhir

No comments:
Post a Comment