சூரியனும் அப்படியே காய்கிறது
சந்திரனும் அப்படியே காய்கிறது
தேர்விற்குத் தயாராகும்
குழந்தையின் அம்மா மட்டும்
இரவு பகல் போக்கிலிருந்து மாறுபடுகிறாள்
திரும்பிப் பார்க்காமல்
பக்கம் பார்க்காமல்
அங்கிங்கு கவனம் சிதையாமல்
கடிகாரத்தைப் பார்த்தபடி
மணித்துளிகளின் கசிவில்
பிள்ளையின் பாடங்களை அவளும் உருப்போடுகிறாள்
உறங்காமல் விழித்திரு என் கண்ணே
என்னுடைய விருப்பம்
நான் மாநிலத்தின் முதலாக வரவேண்டுமென்பது
இப்போது
நீயே மாநிலத்தின்
முதலாக வரவேண்டுமென்பது.
Courtesy : Painting Katie m. Berggren
சந்திரனும் அப்படியே காய்கிறது
தேர்விற்குத் தயாராகும்
குழந்தையின் அம்மா மட்டும்
இரவு பகல் போக்கிலிருந்து மாறுபடுகிறாள்
திரும்பிப் பார்க்காமல்
பக்கம் பார்க்காமல்
அங்கிங்கு கவனம் சிதையாமல்
கடிகாரத்தைப் பார்த்தபடி
மணித்துளிகளின் கசிவில்
பிள்ளையின் பாடங்களை அவளும் உருப்போடுகிறாள்
உறங்காமல் விழித்திரு என் கண்ணே
என்னுடைய விருப்பம்
நான் மாநிலத்தின் முதலாக வரவேண்டுமென்பது
இப்போது
நீயே மாநிலத்தின்
முதலாக வரவேண்டுமென்பது.
Courtesy : Painting Katie m. Berggren

No comments:
Post a Comment