காடுகளின் ராணிகளாக
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக
சுற்றித்திரிந்தவர்களின் வழிவந்தவள்
முந்தைய வனம் அவளுள் செழித்திருந்தது
சூரியஒளி காற்று நீர்
எல்லாவற்றையும் வாங்கி
நிலத்தில் வேர் பற்றியிருக்கும் அவள்
மரங்களின்
இளம் வெதுவெதுப்பான பட்டைகளை
ஆடைகளாக மனங்கொண்டிருந்தாள்
செங்காந்தள் பூ அறிந்த ஒருவனுக்கு
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக
சுற்றித்திரிந்தவர்களின் வழிவந்தவள்
முந்தைய வனம் அவளுள் செழித்திருந்தது
சூரியஒளி காற்று நீர்
எல்லாவற்றையும் வாங்கி
நிலத்தில் வேர் பற்றியிருக்கும் அவள்
மரங்களின்
இளம் வெதுவெதுப்பான பட்டைகளை
ஆடைகளாக மனங்கொண்டிருந்தாள்
செங்காந்தள் பூ அறிந்த ஒருவனுக்கு
உவந்து தன்னை
ஒப்புக்கொடுக்க
அந்தத் தினத்தைத் தெரிவு செய்திருந்தாள்.
%
%
Courtesy -Painting :Kumaraswamy

No comments:
Post a Comment