அந்தியில்
வண்ணத்துப்
பூச்சிகளைத் துரத்திக்கொண்டிருந்த
வளரிளம் சிறுமியின் இரவு
வண்ணங்களினால் ஆனதாக இருந்தது
வண்ணத்துப் பூச்சியின் ஒளியைக் கைக்கொண்ட
அவள் கனவில் தன்னுடலை அசைத்துப் பறந்தாள்
வளரிளம் சிறுமியின் இரவு
வண்ணங்களினால் ஆனதாக இருந்தது
வண்ணத்துப் பூச்சியின் ஒளியைக் கைக்கொண்ட
அவள் கனவில் தன்னுடலை அசைத்துப் பறந்தாள்
மாறுகிற
பருவங்களில்
தன்னைத் தகவமைத்துக்கொள்கிற
பறக்கும் உயிர்களை தன்னில் உணர்ந்தாள்
தன்னைத் தகவமைத்துக்கொள்கிற
பறக்கும் உயிர்களை தன்னில் உணர்ந்தாள்
அவள் வாழ்வின்
சுவை
அந்தப்
பரவசத்தின்
புனைவுகளிலிருந்தே தொடங்குகிறது .
புனைவுகளிலிருந்தே தொடங்குகிறது .
%
Courtesy : Painting -Linda Marcille

No comments:
Post a Comment