சிலசமயம் இரவு
கருணைமிக்கது
தன்னுடைய
வடிமமற்ற கரங்களினால்
சேர்த்தணைத்துக்கொள்ளும்
சிலசமயம் தாய்மை
நிறைந்து
மென்மையாக நீவிவிடும்
மென்மையாக நீவிவிடும்
சிலசமயம் காதலின்
தீவிரத்துடன்
தைவரல் செய்தலினால்
ஆளுமை கொள்ளும்
துயரமோ அன்போ
காதலோ
உணர்வுகளின்
நீர்த்திவலைகளால்
நிறைவுறுகிறது
என்பதை
நம்புபவர்களுக்கு
தலையணை நனையாத
இரவொன்று இல்லை என்பதை
இரவொன்று இல்லை என்பதை
அறிந்தவர்கள்
தானே நாம் .
%
Courtesy : Painting - Silvia Pelissero

No comments:
Post a Comment