பெருகும்
காதலில்
தன்னுடலில்
சேகரமாகும் முத்தங்களை
மிதக்கும் தன் மனதில் பத்திரப்படுத்தினாள்
அவனுக்குப் பரிசளிப்பதற்காக
தனக்குள் சுழன்று கொண்டிருக்கும் அவை
அவளை இம்சித்துக்கொண்டேயிருந்தன
அவனே கொடையாளன்
அளவற்று அளித்தான்
அவன் பிரிந்த இரவுகளில்
ஒருமுறை தொட விழையும்
உச்சிச் சிகரம்போல
விளைச்சலின் மணிகளை
ஒவ்வொரு முறையும் தொட்டுப் பார்க்கிறாள்.
மிதக்கும் தன் மனதில் பத்திரப்படுத்தினாள்
அவனுக்குப் பரிசளிப்பதற்காக
தனக்குள் சுழன்று கொண்டிருக்கும் அவை
அவளை இம்சித்துக்கொண்டேயிருந்தன
அவனே கொடையாளன்
அளவற்று அளித்தான்
அவன் பிரிந்த இரவுகளில்
ஒருமுறை தொட விழையும்
உச்சிச் சிகரம்போல
விளைச்சலின் மணிகளை
ஒவ்வொரு முறையும் தொட்டுப் பார்க்கிறாள்.
%
Courtesy : Painting- John William Waterhouse

No comments:
Post a Comment