மழை நின்றுவிட்டது
இனி வருவதற்கான
எந்த அறிகுறியும் தென்படவில்லை
இந்த வானம்
இத்தனை தெளிவாய்
இதற்குமுன் இருந்ததில்லை
மரம் தன் இலைகளில் தேங்கியிருந்த நீரை
உதிர்த்து முடித்திருந்தது
சிறுநதிகளாக பிரிந்து பரவிக்கிடந்தது
மழை நீர்
மழை நனைத்தது
புல்வெளியையும்
நிலத்தையும் மட்டுமல்ல என்பதை
அந்தச் சிறுமுயல்
தன் உடல் சிலிர்த்து தெளிந்த நீரால் உணர்த்தியது
மழை
முயலின் கண்களில் மினுங்கிக்கொண்டிருக்க
அதன் கால்களில் வழிந்த நீர்
நதியென பெருக்கெடுத்து
காடுகளையும்
மலைகளையும் மூழ்கடித்துக் கொண்டிருந்தது .
Courtesy : painting : Dunjic Vladimir

No comments:
Post a Comment