என் நண்பர்கள் எவ்வளவோ சுதந்திரத்தோடு இருக்கிறார்கள்
பகல் இரவு என்னும் வேறுபாடு இல்லை
ஒளிவு மறைவு என்பதுகூட இல்லை
நல்லவர்கள் அவர்கள்
அவர்களை நான் ஆராய விரும்புவதேயில்லை
அவர்களுக்கு அந்தரங்கங்களும் இல்லை
அவர்களிடத்தில் ஒரு புதிரையும் நான் பார்க்கவில்லை
வியப்புகள் ஏதுமற்ற அவர்களைப் பார்க்கையில்
சிலபோது
பாவமாகக்கூட இருக்கிறது
புதிர்களற்ற உடல்
வெறும் கூடுதானே
பெண்ணுடல் புதிர்களால் ஆனது
இரகசியங்களின் பிறப்பிடம்
கடலை விட ஆழமானது
உயர்ந்த மலைகளை விட உயரமானது
பிரபஞ்சத்தைக் கடந்து செல்வது
வானிலும் மிதக்கும்
நீரிலும் மிதக்கும் இரகசியங்கள் கொண்டது
கண்களுக்கு புலப்படுவதுபோல் இருக்கும்
நாற்பத்தொன்பது ஜென்மங்களும்
பெண்ணாகவே பிறக்க வேண்டும்.
courtesy : Painting -Mr. Amir Khan
No comments:
Post a Comment