பங்குனி பிறந்து விட்டது
என் கொண்டாட்டங்களுடைய வாசனை
பரவத் துவங்கி விடும்
ஒவ்வொரு சித்திரையும்
என் பால்யத்தை மீட்டெடுத்கொள்ளும் காலம்
கிராமத்தில்
திருவிழா களைகட்டும்
சிறுவர்களும் சிறுமிகளும்
புத்தாடையில் அத்தனை வண்ணமயமாய்
கும்மாளமிட்டுத் திரிவார்கள்
இரவுகள்
இசைக் கச்சேரிகளாலும்
குறவன் குறத்தி நாடனகங்களாலும்
பொங்கி வழியும்
ஒரு சிறுவன்
ஒரு சிறுமியிடம் சண்டையிடுவான்
ஒரு பெரியவர்
ஒரு சிறுமியிடம் தன்னைக் கட்டிக்கொள்ளுமாறு
வம்பு செய்வார்
இன்னும்
இன்னும்
இன்னும்
எவ்வளவோ ஞாபகத்திற்கு வருகின்ற மாதம்
இந்தச் சித்திரை முடிய வேண்டாமே என நினைப்பேன்
ஒவ்வொருமுறையும்
என்றாலும் கடந்து செல்லும் இந்தத் திருவிழா மாதம்
காத்திருக்கத் துவங்குவேன்
மீண்டும் பால்ய நினைவுகளுக்கு
அப்பொழுது
நான் பூமியை இன்னும் ஒரு சுற்று சுற்றிக் கடந்திருப்பேன்.
Courtesy - Photography :oochappan
No comments:
Post a Comment