இதற்கு முன்
இவ்விதமாக யாரையேனும்
ஆக்கிரமித்திருந்தேனா
ஒரு புயலைப்
போல
யாவற்றையும் புரட்டிப்போடும்
அன்பைப் பொழிந்திருந்தேனா
இத்தனை பிரியங்களை
சொற்களாக்கி
உனக்குப் பரிசாக
தருவேனா
உன் பிரிவை
வாழ்வின் துயரமான
தருணமெனக்
கருதித் தவிப்பேனா
நம் சந்திப்பை
காலத்தின் மிகப்பெரிய
அதிர்ஷ்டம்
என்று சொல்லி
மகிழ்வேனா
உண்மையில்
உனது பிரிவும்
சந்திப்பும்
என்னுள் நிகழ்ந்திருக்கிறதா
No comments:
Post a Comment