எனக்கு மெல்லிய கூந்தல் என சொல்லுவான்
நான் கூந்தலினால் ஆனவள் அல்ல
அது எனக்கு சுமை
கரும் மேகங்கள் போல
அடர்ந்த என் கூந்தலை
நீரால் அலம்பி
காற்றால் கோதி
பின் அதை பின்னிப் பின்னி
ஒழுங்கு செய்கிறேன் ஒவ்வொருநாளும்
வாசனைத் திரவியம் கொண்டு நிரப்புகிறேன்
கூந்தலிலிருந்து வாசம் பரவுகிறது
அவன் விரும்புகிறான் என்பதாலேயே
சுமக்க முடியாத இந்தக் கூந்தலை
சுமந்து கொண்டிருக்கிறேன்
கூடவே சுமை கூடியதால் நோயுற்றது என் மனதும்
காற்றில் படர்த்தி
மேகங்களுடன் மேகமாய்
அலைந்திடும்
வாசனையும் அலங்காரமுமற்ற
என் கூந்தலில்
லயித்திருக்கும் மனதுடன் .
நன்றி : ஓவியம்- Jeeva Nanthan
No comments:
Post a Comment