வனமெங்கும் அதன் வாசனை
உன் அருகாமையை நினைவவூட்டுகிறது
இந்தக் குளத்தில்
அல்லி மலர்கள்
இதழ் விரிந்து கிடக்கின்றன
மலர்ந்த அல்லியை
ரசிப்பதற்கோ
வெடித்த பலாவை
ருசிப்பதற்கோ
தயங்கும் உன் விருப்பங்கள்
பலாவைச் சுற்றிப் பறக்கும்
தேனீக்கள் போல
அலைகிறது
மரக்கிளைகளில் அமர்ந்திருக்கும் பறவைகள்
நம்மை ஏளனம் செய்வது
வனமெங்கும் ஒலிக்கிறது
குளம் தளும்பிக்கொண்டிருக்கிறது.
No comments:
Post a Comment