Thursday, 30 May 2013

தொலைந்த அண்மை . . .

இவ்விரவு வேளை
கண்களோடு மனதையும்
௬சவைக்கும்படி
நகரத்து விளக்குகள் ஒளிர்ந்தன

வந்து மறையும் வாகனங்களின் ஓசை
மற்றும்
இடையிடையேயான
நடமாட்டங்களின் வழி காதடைகிறது மனிதக்குரல்

இரவுத்துயிலைப் பறிகொடுத்தவன்
சதாபொழுதும்
தன் நினைவுகளிலிருக்கும்
இரவினைக் காணவேண்டி துயருறுகிறான்

அவனது இரவில்
கால்மாற்றி நிற்கும் எருதுக்௬ட்டத்தின் ஓசை
சாளரத்தின் வழி வருகிறது

தன் சகியை
அண்மையில் பூத்த இரவு பூவென
முகரும் பொழுதினை
பத்திரப்படுத்த இயலாத வேதனையால் கலங்குகிறான்
அவனது இரவும்
அவனுடைய அண்மையும் தொலைந்துவிட்டன

புற்கட்டுகளும்
பால்கவுச்சியும் கொண்ட
இல்லத்தில் பின்வாசலில்
முழுநிலவு

இப்போதும்
தன் சகியின் வேதனையைக் கண்டபடி நகர்வதை
நகரத்து நிலா பார்த்துக்கொண்டிருக்கிறது .


தன் நினைவுகளிலிருக்கும்
இரவினைக் காணவேண்டி துயருறுகிறான்

அவனது இரவில்
கால்மாற்றி நிற்கும் எருதுக்௬ட்டத்தின் ஓசை
சாளரத்தின் வழி வருகிறது

தன் சகியை
அண்மையில் பூத்த இரவு பூவென
முகரும் பொழுதினை
பத்திரப்படுத்த இயலாத வேதனையால் கலங்குகிறான்
அவனது இரவும்
அவனுடைய அண்மையும் தொலைந்துவிட்டன

புற்கட்டுகளும்
பால்கவுச்சியும் கொண்ட
இல்லத்தில் பின்வாசலில்
முழுநிலவு

இப்போதும்
தன் சகியின் வேதனையைக் கண்டபடி நகர்வதை
நகரத்து நிலா பார்த்துக்கொண்டிருக்கிறது .

No comments: