நான் அறியாவண்ணம்
என்னை நீ உற்றுநோக்குவது
தெரியாது எனும்
பாவனையில்
நான் இருப்பது
தெரிய வரும்
ஒரு நாள்
எத்தனைக் காலம்
தவித்திருந்தேன் உனக்காக
என்பதறிந்து
நாணும்
உன் முகம் பார்க்க
எனக்கும் ஆவலாய் இருக்கிறது
மலர் எந்த வண்டையும்
அழைப்பதில்லை
தேனைத் தேடித்தான் சென்று உண்கின்றது
எந்தப் பட்டாம்பூச்சியும்
ஏன்
உனக்கு மட்டும்
புரிவதில்லை
இயற்கையின் நியதிகள்
உனக்குப்
புரியும் மட்டும்
காத்திருப்பேன்
என்
இளமை துவளத் துவள.
No comments:
Post a Comment