Tuesday, 5 August 2025

 



நீலமும் இன்னபிற நிறங்களும்  

 

கடலும்

வானமும்

நீலமல்ல

 

நம் மனம் நிகழ்த்தும்

மாய மென்பதை

நுரைத்த அலைகளும்

கருத்த மேகமும்

உணர்த்த

 

மண்ணில்

காணும்

நிறமெல்லாம்

நிஜமல்ல

அவை

கண்ணின் கற்பிதங்களென

ஓசையின்றி

ஒலிக்குமொரு குரல்

உள்ளிருந்து உரைத்திடும்

அழுத்தமாக

**

1 comment:

Muthu Mahizh said...

மனம் நிகழ்த்தும் மாயம்
கண்ணின் கற்பிதங்கள்

அமையான வரிகள்👌🏼
சிறப்பு.💐