காவியாவும் அர்ச்சனாவும்
இப்போதும்
அவர்கள் புத்தகம் வாசிக்கிறார்கள்
அவரவர் அறையில்
அவரவர் விருப்பத்தில்
தேர்ந்து டிவி பார்க்கிறார்கள்
அத்தனை ஒழுங்கு அவர்களின் அறை
முன்பு ஒரு சமயம்
"அவ என்னைக் கிள்ளிவைக்கிறா'
அவ என்னை வம்பு செய்கிறா "
காவியாவும் அர்ச்சனாவும்
சேர்ந்திருக்கும் பொழுதுகள்
இப்படித்தான்
ஒருநாள் இவர்கள் ஒன்றாக
இருந்தால்
ஒன்பது நாள் ஒழுங்கு செய்யும்படி
வீடு அப்படிக் கலைந்துக் கிடக்கும்
நிமிடத்திற்கொருமுறை ஓயாத சண்டை
நிமிடத்திற்கொருமுறை சமாதானமும்
நிமிடத்திற்கொருமுறை அணைப்பும்
இப்போது அவர்கள்
வளர்ந்துவிட்டார்கள்.
**
"இப்பொழுது வளர்ந்து
விட்டாள்" கவிதைத் தொகுப்பிலிருந்து..
No comments:
Post a Comment