Wednesday, 18 July 2012

காற்றில் மிதக்கும் நீலம்…




ஆதி நாள் துவங்கி
அந்த நிலம் வெப்பத்தினால்
கனன்று கொண்டிருந்தது

வெண்மையால் தும்பைப் பூக்கள்
மஞ்சளாய் ஆவாரம் பூக்கள்

காட்டுச் சுண்டைகாயின்
மகரந்தம் மினுங்கும் பூக்கள்
என செழித்திருந்த
அந்த தரிசு நிலம் எங்கும்
துளசியின் வாசம் பரவியிருக்க

ஏர் பிடித்து உழப்படாமலும்
பண்படுத்தி விவசாயம் செய்யப்படாமலும்
தனித்திருந்தது

நிழல் தரும் மரங்களற்று விரிந்திருந்த
அந்த நிலம்
அந்த வெப்பம்
அவனை நினைவூட்டியபடியிருக்க

பெயர் தெரியாத அந்தக் காட்டுப் பூ
சூரியனிடம் தனக்கான நீலநிறத்தைப் பெற்று
தன் இதழ்களை
அகல விரிக்கத் துவங்கியது.


1 comment:

Ponnambalam kalidoss ashok said...

அற்புத ஆழ்ந்த சிந்தனை கூடிய படம் ...
பெண், இங்கு நிலமாய் உருவெடுத்து , நில வழி உயிர்ப்போடு
ஒவ்வரு வளர்ச்சியும் சொற்கள் கண்டு ..நமக்கு நிலமா ,பெண்ணா என்ற மாலை மயக்கம் ..
பின், மனம் ஏர் பிடித்து உழும் பொழுது...பெண் என்ற இயற்கை அறிவியலின் வளர்ச்சி படிவங்கள் வளர வளர ---
நம் இதயம் நீலநிறத்தைப் பெற்று தன் இதழ்களை அகல விரிக்கத் துவங்கியது. ..
காற்றில் மிதக்கும் நீலம்...காற்றை அளக்க இயலா நம், அதில் மிதக்கும் நீலத்தையா..?