Sunday, 22 July 2012

அலைச்சல் ...



காற்றின்  ஈரத்தை
உணவாக்கி
உயிர்த்திருக்கும்
மரமென
அடி  பெருத்து அசைகின்ற
முத்தம்  ஒன்றை
நீண்ட  அலகுடைய
கனவுப்பறவை
கொத்திக் கொண்டு  செல்கிறது
பாலைவன  மெங்கும்
இன்னும்
ஒருமுத்தம்  தேடி.

1 comment:

Ponnambalam kalidoss ashok said...

காற்றின் ஈரத்தை உணவாக கொண்டு மரமாகி ----
இது அவளின் உலகம்,,அன்பு பதம் கொண்டு செழித்து வளர்ந்து ..
பசுமை பாச வனமாய் ..இங்கு கிடைக்கும் முத்தம் என்பது , முத்துக்குள் உள்ள சிப்பி ..
ஆனாலும், அவன் அலைகிறான் இது போன்ற முத்தம் வேறு எங்கும் கிடக்கும் என்று..
எப்படி கிட்டும்? பாலைவனத்தில் , காற்றின் ஈரம் கொண்ட உதடுகள் உண்டா...?
அந்த உண்மை , பாலைவன கனல் நீர்..அங்கு உள்ள அனல் சுட்ட பின் ,உணர்வான், இந்த காற்றின் ஈரத்தை ...
அலைச்சல் ---உண்மை காண வேண்டி..