Saturday, 21 July 2012

பருவ மாற்றம்…




மதி மயங்கும்
வனத்தில்
நெருப்பென  அலையும்
உனது பார்வையில்

பொசுங்கிவிடும்  சாத்தியப்பாடுகள்
அதிகரிக்க
அத்தருணத்திற்காக 
ஒப்பனைகளோடு  காத்திருக்க

உன்
அண்மை
என்னை   எரித்தாலும்

மீண்டும் மீண்டும்
துளிர்க்கின்றேன்
காதலின்  பசுந்தளிர்களாய்.

1 comment:

Ponnambalam kalidoss ashok said...

பொசுங்கிவிடும் சாத்தியப்பாடுகள் இருந்தாலும் மீண்டும் -துளிர்க்கின்றேன் பசுமையுடன் ...
ஒப்பனைகள் என்பது அன்பின் உயிர்ப்போடு வெளியாகும் வற்றாத ஜீவ நதி..
அது, எப்படி எரித்தாலும், தன் குளுமை கொண்டு அணைத்து(!,?) விடும் ....
ஊற்று என பெருகும் நதி , பொங்க பொங்க ...எரித்தாலும் துளிர்க்கும் ...
வெள்ளுடை கொண்டு நதி ஓரம் உள்ள பெண்ணே ..!..வண்ண வண்ண மலர்கள் உன் அருகே ...
உன் சூழல் முழுக்க உன் நினவு பசுமை ..காதல் சுழல, அதோ வரு......என்றும் ஜீவிக்கும் காதல்..உலகை உயிர்பிக்கும் அன்பு நேசங்கள்..பூமி பந்தின் காந்த விசை , காதல்..
பருவ மாற்றம்---உன் உணர்வின் வளர் மாற்றம் , அன்பு எல்லை நோக்கி..