ஒப்பனைகளேதுமின்றி
உறக்கத்தில்
ஆழ்ந்திருக்கிற மனத்தில்
நீ
ஒரு மீனென நீந்தி
என்னைக் கலைக்கிறாய்
உன் நினைவு வாதையாக
மாறி
நிரம்புகையில்
களைத்த எனதுடல்
நித்திரையில் முழ்கி
கனவுகளைத் தூண்டுகிறது
கனவில்
வடிவங்களற்று
என் மீது
படர்கிறாய்
உன்னை
உணர்ந்தபடி
ஏதேதோ சொல்கிறேன்
ரகசியமாய் எவரும்
அறியாவண்ணம்
பறவைகள்
நமக்கான
பாடலை இசைக்கத்
தொடங்குகின்றன
உனதுடனான எனது இருப்பை
விழுங்கியபடி
மெல்லத் துயில்
கலைகிறது
உன்
நினைவை
என்மீது போர்த்தியபடி.
1 comment:
நினைவு கனவாக , நித்திரை தன் நிறத்தை இழக்க ..
தூங்க விடா கனவு..நினவு புரவிகளாக தன் இருப்பை வேக வேகமாக பதிவு செய்ய ,
ஓட்டம் வடிவங்களற்று சென்றாலும், பறவைகள் தன் இசை வழியாக....
ஒரு மீனென நீந்தி என்னைக் கலைக்கிறாய் --மீன்கள் எங்காவது நின்று பார்த்தது இல்லை ..
எதாவது ,ஒரு நேர்கொட்டிலவாது செல்கின்றதா? இல்லை..அது போல், நினைவுகள்
கனவுகளை பல திசைகளில் ...என்ன ஒரு ஒப்பிடு, நினவு ஒரு மீனாக ..
கவி வரிகள் உதவியுடன் , நாம் காதல் தடாகத்தில் , மீன்களாக ...
நாம் அங்கத ஒப்பனைகளை (மன ஒப்பனகைகளும் கூட) கழற்றி வைத்து விட்டு, நாம் நாமாக உலா வரும் பொழுது
துயில் நிலை மெல்ல கனவு உலகிற்குள் சஞ்சரிக்க ..
நினைவே ஒரு சங்கீதம்..
Post a Comment