Sunday, 8 July 2012

வெட்கம்…



இந்த
வானத்திலிருந்து

பூவெனச்
சாரல்  பொழிகிறது 

பெரும்  காற்றோடு
முத்து முத்தாய்  நீரைச்  சொட்டுகிறது 

பனிக்கட்டியாய்கூட
பொழிந்து
தலையில்  குட்டுகிறது

எப்படியும்  வந்து 
நிலத்தை  ஈரமாக்கும் 
இந்த மழை 

எப்போது  வரும்  என்பது 
அறியவியலாப்  புதிர் 

உன்னை  நினைத்தாலே 
இந்த நிலத்தை 
ஈரமாக்கும் 
உனக்கு  முன்பு 

இந்த
வானமும் 
அது 
சொரியும்  மழையும்
வெட்கப்படாமல்  வேறு என்ன  செய்யும்.

1 comment:

Ponnambalam kalidoss ashok said...

வானம், சாரல், மழை என இயற்கை வரிசை ..
மண்ணை ஈரம் ...
உன் நினவு , இயற்கை தாண்டி, அறிவியல் தாண்டி..
புதிரானது ..இன்பமானது..என் அன்பே...
உன் நினைவுகள் அவ்வளவு குளிரானதா ?
வானமும் மழையும்
வெட்கப்படாமல் வேறு என்ன செய்யும்...
இங்கு மண்ணும் பெண்ணும் உயிர்ப்பான அன்பு தளங்களாக ...
வெட்கம்..மனசுக்குள் மத்தாப்பு ..