உனக்கான
சொல்லைத் தேர்ந்தெடுத்து விட்டேன்
தீர்ந்து போகவே
முடியாதது அச்சொல்
பகலும்
இரவும்
இரவின் இடைவெளிகளிலும்
நிரம்பித் ததும்பும்
உன் நினைவுகளினால்
உயிர் பெறுகிறது
அந்தச் சொல்
பேசிப்பேசி
பேச மொழியற்ற தருணங்களில்
என் உலகிலிருந்து
ஒரு பூவைப் பறிப்பது
போல
அந்த சொல்லை
எடுத்து வைத்துள்ளேன்
உன்முன்
பூவின் வாசமென
உருமாறி நிரம்புகிறது
நம்மிடையே
அச் சொல்லை
நீ கேட்பாயெனில்
ஆதியிலே
அச்சொல்லிருந்தது
அந்தசொல்
நானாக
உயிர்பெற்றிருக்கிறேன் என
உணர்வாய்
அன்று
அது
நம்மை அழைத்துச் செல்லும்
அன்பினால்
பூக்கள் பூக்கும் தேசத்திற்கு .
1 comment:
அன்பு-- சுழன்றும் அன்பு பின்னது உலகம் என உலகை அன்பின் பிடிக்குள் கொண்டு வரும் கரும்பு முயற்சி..
என்றும் தீரா நன் வார்த்தைகள் , நன் குடி மக்களின் அட்சய பாத்திரம்..நம்மை பத்திரமாய் ..
பேசும் வார்த்தைகள் சொல்லும் அர்த்தம், பல நேரங்களில் மௌனம் சொல்லும் அர்த்தம் இரண்டும் கலந்த வாழ்வு..
மௌன மோன அர்த்தம் , இரும்பின் வலிமையும் பூவின் மென்மையும் கொண்ட ,மேன்மையான மனதை வருட..
அப்பப்பா, என்ன ஒரு சந்தொஷ க்ஷணம் ...'அம்மா ' என்ற வார்த்தைக்கு , மேன்மை கொட்டிய மேள சங்கீத வார்த்தை, பூவின் நறுமணமாய், அன்பு..
அன்பு ..உலகை ஆள வந்த , என்றும் பசுமை கூட்டும், கொண்டாட்ட வார்த்தை..
Post a Comment